அசத்தலான சுவையில் ஜவ்வரிசி கிச்சடி செய்வது எப்படி.?
சென்னை -சட்டுனு ஒரு பிரேக்ஃபாஸ்ட் செய்யணுமா?. அதுக்கு ஜவ்வரிசி கிச்சடிய ச்சூஸ் பண்ணுங்க.. அஞ்சே நிமிஷத்துல பிரேக் பாஸ்ட் ரெடி .
ஜவ்வரிசி கிச்சடிக்கு தேவையான பொருட்கள்;
- பொடி ஜவ்வரிசி= 250 கிராம்
- எண்ணெய்= 4 ஸ்பூன்
- கடுகு =அரை ஸ்பூன்
- உளுந்து= ஒரு ஸ்பூன்
- பெரிய வெங்காயம்= ஒன்று
- கேரட் =ஒன்று
- பீன்ஸ் =4
- பச்சை மிளகாய்= 3
- இஞ்சி =அரை இன்ச்
- பெருங்காயம்= கால் ஸ்பூன்
- மஞ்சள் தூள் =அரை ஸ்பூன்
- எலுமிச்சை =ஒரு ஸ்பூன்
- கொத்தமல்லி= இலைகள் சிறிதளவு.
செய்முறை;
ஜவ்வரிசியை 6 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். காலை உணவுக்கு தயார் செய்கிறீர்கள் என்றால் இரவே ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுந்து , கடலைப்பருப்பு ஆகியவற்றை தாளித்துக் கொள்ளுங்கள். அதனுடன் பச்சைமிளகாய் ,வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். இப்போது கேரட் மற்றும் இஞ்சியை துருவி சேர்க்கவும்.
பிறகு பீன்சையும் பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கி விடவும், அதனுடன் பெருங்காயம் மற்றும் மஞ்சள் தூளையும் சேர்த்து கிளறி விடவும். ஐந்து நிமிடம் கிளறிய பிறகு ஜவ்வரிசியை தண்ணீர் வடித்து சேர்த்து நன்கு கலந்து விடவும் இப்போது உப்பு சேர்த்து கலந்து அதை மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக வைக்கவும், இடையிடையே கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான ஜவ்வரிசி கிச்சடி ரெடி..