ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் ஜவ்வரிசி கேசரி செய்வது எப்படி?..
சென்னை – ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் ஜவ்வரிசி கேசரி செய்வது எப்படி என்று பார்ப்போம்..
தேவையான பொருட்கள்;
- ஜவ்வரிசி= 2 டம்ளர்
- தேங்காய் =அரை மூடி
- நெய்=3 ஸ்பூன்
- ஏலக்காய்= 5
- முந்திரி, திராட்சை =தேவையான அளவு
- கேசரி பவுடர்= தேவையான அளவு
- சர்க்கரை= இரண்டு டம்ளர்.
செய்முறை;
முதலில் ஜவ்வரிசியை மூன்று மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு அரை மூடி துருவிய தேங்காயை வைத்து பால் எடுத்து தயார் செய்து கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் முந்திரி திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளவும் .அதே பாத்திரத்தில் ஜவ்வரிசியை தண்ணீர் வடித்து விட்டு சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதனுடன் கேசரி பவுடரையும் சேர்த்து கலந்து ,எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை ஊற்றி கிளறி கொள்ளவும் .தேங்காய் பால் சற்று வற்றி வந்ததும் சர்க்கரையை சேர்த்து கலந்து இரண்டு நிமிடம் கிளறி விடவும். பிறகு ஏலக்காயை தட்டி சேர்த்து, அதனுடன் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சையும் கலந்து இறக்கினால் தித்திப்பான சுவையில் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ஜவ்வரிசி ரெடி..