ஆரோக்கியமிக்க நாவல்பழம் ஜாம் செய்வது எப்படி?
Jamun Fruit Jam- குழந்தைகளுக்குப் பிடித்த ஜாம் இனிமேல் வீட்டிலேயே தயார் செய்யலாம். அதிலும் ஆரோக்கியம் உள்ள ரசாயனம் கலக்காத நாவல் பழத்தை வைத்து ஜாம் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்;
- நாவல் பழம் =அரை கிலோ
- சர்க்கரை= 150 கிராம்
- பட்டர்= ஒரு ஸ்பூன்
- எலுமிச்சை =அரை பழம்
செய்முறை;
நாவல் பழங்களை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து கழுவி எடுத்துக் கொள்ளவும். பிறகு அதை கொட்டைகளை நீக்கி நறுக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து அதில் 50ml தண்ணீர் ஊற்றி சர்க்கரை கரையும் வரை சூடாக்கி கொள்ளவும்.
பிறகு அதிலே அரைத்த நாவல் பழ விழுதை சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.உப்பு 2 பீன்ச் சேர்த்து நன்கு கெட்டியாக ஜாம் பதத்திற்கு வரும் வரை கிளற வேண்டும் .இப்போது ஜாம் பதத்திற்கு வந்த பிறகு அதில் பட்டர் சேர்த்து கிளறி 2 நிமிடம் கழித்து எலுமிச்சம் பழச்சாறை சேர்த்து கிளறி இறக்கினால் ஆரோக்கியம் மிக்க நாவல் பழ ஜாம் தயாராகிவிடும்.