நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நெல்லிக்காய் குல்கந்து செய்வது எப்படி?.
நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்;
- நெல்லிக்காய் =அரை கிலோ
- வெல்லம்= 300 கிராம்
- தேன் =கால் கப்
செய்முறை;
முதலில் நெல்லிக்காயை கொட்டைகளை நீக்கி துருவி எடுத்துக் கொள்ளவும் .பிறகு ஒரு அடி கனமான கடாயில் நெல்லிக்காயை சேர்த்து மிதமான தீயில் வைத்து கால் டம்ளர் தண்ணீரும் ஊற்றி வெல்லம் சேர்த்து நன்கு கலந்து விடவும். சிறிது நேரத்தில் வெல்லம் கரைந்து அதன் நிறம் மாறி இருக்கும்.
தண்ணீர் வற்றும் வரை நன்கு சுருள கிளறி ஆற வைக்க வேண்டும். நன்கு ஆறிய பிறகு தேன் சேர்த்து கலந்து விடவும். பிறகு இதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்து விடவும். தினமும் காலையில் அரை ஸ்பூன் வீதம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சத்தி அதிகரிக்கும்.