தாய்ப்பால் அதிகரிக்க மருந்து குழம்பு செய்வது எப்படி?
மருந்து குழம்பு -தாய்ப்பால் அதிகரிக்கும் மருந்து குழம்பு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருள்கள்;
- கடுகு= ஒரு ஸ்பூன்
- கொத்தமல்லி விதைகள்= ஒரு ஸ்பூன்
- மிளகு= ஒரு ஸ்பூன்
- சீரகம் =ஒரு ஸ்பூன்
- நல்லெண்ணெய்= நான்கு ஸ்பூன்
- சுண்டைக்காய் வத்தல் =ஒரு கைப்பிடி அளவு
- பூண்டு =முப்பது பல்
- சின்ன வெங்காயம்= 15
- பெருங்காயம் =அரை ஸ்பூன்
- மிளகாய்த்தூள்= ஒரு ஸ்பூன்
- மஞ்சள் தூள் =அரை ஸ்பூன்
- புளி= எலுமிச்சை அளவு
- முருங்கைக்காய் =1
செய்முறை;
முதலில் ஒரு பாத்திரத்தில் கடுகு ,மிளகு, சீரகம், கொத்தமல்லி விதைகள் ஆகியவற்றை வறுத்து பொடி செய்து கொள்ளவும். தற்போது ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் சேர்த்து பூண்டு மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் சின்ன வெங்காயம் சேர்க்கவும். சின்ன வெங்காயம் வதங்கிய பிறகு சுண்டக்காயை சேர்த்து வதக்கவும்.
பிறகு அரைத்த பொடி, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும். இப்போது புளியை ஊறவைத்து கரைத்து சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு மற்றும் முருங்கைக்காய் சேர்த்து குழம்பை நன்றாக கொதிக்க வைக்கவும். குழம்பு எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்க வைத்து இறக்கினால் மருந்து குழம்பு தயாராகிவிடும்.இந்த குழம்பு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் .