முட்டை மிளகு வறுவல் செய்வது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!
Egg pepper fry-முட்டை மிளகு வறுவல் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
- முட்டை =4
- எண்ணெய் =4 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் =3
- தக்காளி =2
- மிளகு தூள் =1 அரை ஸ்பூன்
- மிளகாய் தூள் =கால் ஸ்பூன்
- மல்லித்தூள் =அரை ஸ்பூன்
- மஞ்சள் தூள் =கால் ஸ்பூன்
- பூண்டு =4 பள்ளு
- சீரக தூள் =1/2 ஸ்பூன்
செய்முறை:
முட்டையை வேகவைத்து தோல் நீக்கி இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கால் ஸ்பூன் மிளகுத்தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நறுக்கி வைத்துள்ள முட்டையையும் சேர்க்கவும் .
அதில் மஞ்சள் கருப்பகுதி கீழ்நோக்கி இருக்க வேண்டும், இவ்வாறு இரண்டு நிமிடம் வேகவைத்து பிறகு அதை திருப்பி விட்டு ஒரு நிமிடம் வேக வைக்கவும். திருப்பும் போது முட்டை உடைந்து விடாமல் கவனமாக திருப்பவும். பிறகு அதை எடுத்து வைத்துவிட்டு அதே எண்ணெயில் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் .
வெங்காயம் வதங்கியதும் பூண்டை இடித்து சேர்த்துக் கொள்ளவும், அதனுடன் மிளகுத்தூள் ஒரு ஸ்பூன், மிளகாய்த்தூள் கால் ஸ்பூன், மல்லித்தூள் அரை ஸ்பூன், சீரகத்தூள் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விடவும்.
இப்போது தக்காளியை அரைத்து சேர்த்துக் கொள்ளவும் .தக்காளியின் பச்சை வாசனை போகும் வரை கிளறி ,வறுத்து வைத்துள்ள முட்டையை அதிலே சேர்க்கவும். மசாலா முட்டையின் மேல் படும்படி கிளறிவிட்டு இறக்கினால் சுவையான முட்டை மிளகு வறுவல் தயார்.