அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

Published by
K Palaniammal

முருங்கைக்காய் கிரேவி– முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள் :

  • முருங்கைக்காய் =3
  • வெங்காயம்=2
  • தக்காளி =2
  • சீரகம்=1 ஸ்பூன்
  • எண்ணெய் =4 ஸ்பூன்
  • பச்சைமிளகாய் =2
  • கரம் மசாலா =1 ஸ்பூன்
  • மிளகாய் தூள் =1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் =1 ஸ்பூன்
  • மல்லி =1 ஸ்பூன்
  • ஏலக்காய் =1
  • கிராம்பு =2
  • பட்டை =2
  • சோம்பு=1ஸ்பூன்
  • கசகசா =1ஸ்பூன்
  • தேங்காய் =1 துண்டு
  • வேர்க்கடலை =2ஸ்பூன்

செய்முறை;

ஒரு பாத்திரத்தில்  வேர்க்கடலை,  மல்லி,  பட்டை , ஏலக்காய்,  கிராம்பு சோம்பு , கசகசா சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். அதனுடன் ஒரு துண்டு தேங்காய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இதனை ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்த்து விழுது பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் 4 ஸ்பூன் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்தவுடன்  சீரகம் சேர்த்து சீரகம் பொரிந்ததும் இரண்டு பெரிய வெங்காயம் சிறியதாக நறுக்கியது இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அதனுடன் இரண்டு அரைத்த தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நன்கு மிளகாய்த்தூள்,  கரம் மசாலா,  மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் .அதனுடன்  முருங்கைக்காயை சேர்த்து வதக்கவும். அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.

பிறகு ஐந்து நிமிடம் கழித்து அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறவும். சிறிது நேரம் மசாலாவுடன் முருங்கைக்காயை கலந்து விடவும் பின்பு தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். பின்பு சிறிது கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான முருங்கைக்காய் கிரேவி தயார்.

 

Recent Posts

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

45 mins ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

49 mins ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 hours ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

3 hours ago