சுவையான தயிர் மசாலா செய்வது எப்படி?
நம்மில் அதிகமானோர் தயிர் சாதத்தை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான தயிர் மசாலா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- கெட்டி தயிர் – 2 கப்
- தக்காளி – 3
- கடலைமாவு – கால் கப்
- நெய் – 3 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவைக்கு
- பூண்டு – 6 பல்
- எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
அரைக்க
- பூண்டு – 5
- மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 2
- சீரகம் – 2 டீஸ்பூன்
- மல்லித்தழை – ஒரு கைப்பிடி
- முந்திரி – 6
செய்முறை
முதலில் அரைக்க வேண்டியவற்றை நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்த விழுதுடன் தயிர், கடலை மாவு, உப்பு சேர்த்து கட்டியில்லாமல் கரைக்க வேண்டும். பின் தக்காளியை சற்று பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய், நெய் சேர்த்து காயவைத்து, தக்காளி துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும். பின் இதனுடன் விழுதுடன் கலந்து வைத்திருக்கும் தயிர் கலவை சேர்த்து, சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்க வேண்டும். இப்பொது சுவையான தயிர் மசாலா தயார்.