சுவையான அவரைக்காய் பொரியல் செய்வது எப்படி?
நாம் நமது வீடுகளில் காய்கறிகளை பயன்படுத்தி பல வகையான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான அவரைக்காய் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- அவரைக்காயாய் – கால் கிலோ
- வெங்காயம் – ஒரு கைப்பிடி
- பச்சை மிளகாய் – 4
- மஞ்சள் தூள் – தேவைக்கு
- உப்பு – தேவைக்கு
- எண்ணெய் – சிறிது
வறுத்து பொடிக்க
- வேர்க்கடலை – ஒரு தேக்கரண்டி
- அரிசி – ஒரு தேக்கரண்டி
தாளிக்க
- கடுகு – சிறிது
- உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- பெருங்காயம் – சிறிது
- சோம்பு – அரை தேக்கரண்டி
செய்முறை
முதலில் தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் காயை தேவையான அலாவில் நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் அரிசியையும், வேர்கடலையையும் எண்ணெய் இல்லாமல் வறுத்து, அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்க வேண்டும். பின் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாயை போட்டு வதங்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அவரைக்காயை சேர்த்து வதக்கி, தேவையான அளவு நீர் சேர்த்து மூடி வைத்து வேகா விட வேண்டும். காய் வெந்ததும், அரைத்து வைத்த வேர்க்கடலை, அரிசி பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் களைத்து இறக்க வேண்டும். இப்பொது சுவையான அவரைக்காய் பொரியல் தயார்.