நம்மில் அதிகமானோர் தினமும் விதவிதமான குழம்புகளை வைத்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான பொட்டுக்கடலை குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொண்டு, பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவேண்டும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.
பின் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நன்கு சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு பொரிய விட வேண்டும். பிறகு பச்சை மிளகாயை போட்டு 2 நிமிடம் வதக்கி வெங்காயத்தை சேர்த்து வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு குழைய வதக்கி தேவையான அளவு தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூடி வைக்கவேண்டும்.
தண்ணீர் ஓரளவு சுண்ட தொடங்கும்போது, பாத்திரத்தை இறக்கி வைத்து பொடித்து வைத்த பொட்டுக்கடலை மெதுவாக தூவி கட்டி இல்லாமல் கலக்க வேண்டும். பிறகு கொத்தமல்லி தூவிப் பரிமாற வேண்டும். இப்போது சுவையான பொட்டுக்கடலை குழம்பு தயார்.
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…
சென்னை : மெட்ரோ நிர்வாகம் தற்போது, இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோஇரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ரூ.3,657.53 கோடி…
கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு, கிறிஸ்மஸ் ட்ரீ வைக்க காரணம் மற்றும் வீட்டில் ஸ்டார் வைப்பது எதற்காக என்றும் இந்த…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பிஎஸ்எல்வி சி-60 (PSLV-C60/SPADEX ) ராக்கெட் எப்போது எந்த தேதியில்…