சுவையான அரிசி பருப்பு சாதம் செய்வது எப்படி?

Published by
லீனா

நாம் நமது வீடுகளில் விதவிதமான சமையல்கலை செய்து  சாப்பிடுவதுண்டு. சுவையான அரிசி  செய்வது எப்படி என்று  பார்ப்போம்.

தேவையானவை

  • சாப்பாட்டு அரிசி – ஒரு டம்ளர்
  • துவரம் பருப்பு – ஒரு கைப்பிடி
  • சின்ன வெங்காயம் – 100 கிராம்
  • பூண்டு  – 8 பல்
  • உப்பு தேவையான அளவு
  • கடுகு அரை தேக்கரண்டி
  • சீரகம் கால் தேக்கரண்டி
  • மஞ்சள் பொடி அரை தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் 4
  • கருவேப்பிலை
  • தக்காளி ஒன்று
  • எண்ணெய் தாளிக்க
  • நெய் ஒரு தேக்கரண்டி

செய்முறை

முதலில் அரிசி பருப்பை 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து, வடித்து வைக்க வேண்டும். பின் தக்காளி, பச்சை மிளகாய் இரண்டையும் நறுக்கி வைக்க வேண்டும். வெங்காயம் பூண்டை உரித்து வைக்க வேண்டும்.

பின் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளிக்க வேண்டும். அதில் வெங்காயம் பூண்டு பச்சைமிளகாய் தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். பின் அரிசி பருப்பு சேர்த்து 3 நிமிடம் வறுக்க வேண்டும்.

அதன்பிறகு 3 டம்ளர் தண்ணீர் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவேண்டும். தண்ணீர் வற்றியதும் கலவையை குக்கரில் வைத்து மூன்று விசில் வந்ததும் இறக்கவும். இப்போது சுவையான அரிசி பருப்பு சாதம் தயார்.

Published by
லீனா

Recent Posts

அடுத்த மகா கும்பமேளா மணலில் தான் நடைபெறும்! ‘ஷாக்’ கொடுக்கும் பருவநிலை ஆர்வலர்!

அடுத்த மகா கும்பமேளா மணலில் தான் நடைபெறும்! ‘ஷாக்’ கொடுக்கும் பருவநிலை ஆர்வலர்!

டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…

29 minutes ago

முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…

33 minutes ago

இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது.…

1 hour ago

எங்கள் தலைவரை போல பேண்ட் சட்டை அணிந்து கொண்டு நடிக்கிறீர்கள்…முதல்வரை சாடிய ஆதவ் அர்ஜுனா !

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்,  கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா…

2 hours ago

உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!

சென்னை :  தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…

3 hours ago

AFG vs ENG: சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறப்போவது யார்? ஆப்கானிஸ்தான் பேட்டிங்…

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் பி பிரிவின் லீக் ஆட்டத்தில், லாகூரின் கடாபி மைதானத்தில்…

3 hours ago