சுவையான குடைமிளாகாய் சாதம் செய்வது எப்படி?
நம்மில் நமது வீடுகளில் வித விதமாக சாதம் செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- குடைமிளகாய் – 3
- கடுகு – அரை தேக்கரண்டி
- சீரகம் – ஒரு தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் – 4
- தனியா – ஒரு தேக்கரண்டி
- வேர்க்கடலை – 3 தேக்கரண்டி
- கரம் மசாலா – அரை தேக்கரண்டி
- மிளகு – ஒரு தேக்கராண்டி
- சாதம் – 2 கப்
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- தேங்காய் – 2 தேக்கரண்டி
செய்முறை
முதலில் எண்ணெய் இல்லாமல் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், தனியா, வேர்க்கடலை மற்றும் மிளகை வறுக்க வேண்டும். பின் குடைமிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் வறுத்த பொருட்களை கொரகொரப்பாக பொடித்து கரம் மசாலா சேர்த்து கலந்து வைக்க வேண்டும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின குடைமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். 3 நிமிடம் வதக்கி உப்பு மற்றும் மசாலா பொடியை சேர்த்து வதக்க வேண்டும்.
குடைமிளகாய் முக்கால் பாகம் வெந்ததும், இறக்கி சாதத்துடன் கலந்து 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும். இப்போது சுவையான குடைமிளாகாய் சாதம் தயார்.