சுவையான கத்தரிக்காய் மசியல் செய்வது எப்படி?
சுவையான கத்தரிக்காய் மசியல் செய்யும் முறை.
நாம் நமது இல்லங்களில் காய்கறிகளை வைத்து விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்த பதிவில் சுவையான கத்தரிக்காய் மசியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- பெரிய கத்தரிக்காய் – 1
- பூண்டு – 4 பல்
- இஞ்சி – சிறிய துண்டு
- எண்ணெய் – 3 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- பெரிய வெங்காயம் – 3
- பச்சை மிளகாய் – 3
- மிளகாய் தூள் – கால் தேக்கரண்டி
- தக்காளி சாறு – 1 கப்
- கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
முதலில் கத்தரிக்காயை எடுத்து அங்கங்கே குத்தி, மேலே எண்ணெய் தடவி, ஹைமைக்ரோ ஹையில் வாய்த்து 10 நிமிடங்கள் வைக்க வேண்டும். பின் கத்தரிக்காயின் தோலை உரித்து எடுத்துவிட்டு, உள்ளிருக்கும் சதையை ஒரு பாத்திரத்தில் போட்டு மசிக்க வேண்டும்.
பின் மைக்ரோவேவ் பாத்திரத்தில் எண்ணெயை விட்டு, அதில் நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், இஞ்சி ஆகியவற்றை போட்டு 2 நிமிடங்கள் ஹைமைக்ரொ ஹையில் வைக்க வேண்டும்.
பின் வெந்த கத்தரிக்காயாய், மிளகாய்தூள், உப்பு, தக்காளி சாறு ஆகியவற்றை கலந்து 8 நிமிடங்கள் ஹைமைக்ரொ ஹையில் 8 நிமிடங்கள் சமைத்து, அதன் மேல் கொதத்தமல்லி தழையை தூவி இறக்க வேண்டும். இப்பொது சுவையான கத்தரிக்காயாய் மசியல் தயார்.