சுவையான கத்தரிக்காய் பச்சடி செய்வது எப்படி?
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நாம் சமைக்கும் போது, பல காய்கறிகளை வைத்து, பலவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான காத்தரிக்காய் பச்சடி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- கத்தரிக்காய் – 2
- பூண்டு – 4 பல்
- பச்சை மிளகாய் – 5
- தேங்காய் துருவல் – கால் கப்
- சீரகம் – ஒரு தேக்கரண்டி
- புளி – சிறிது
- தக்காளி -2
- சின்ன வெங்காயம் – 10
- உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
- கடுகு – ஒரு தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் கத்தரிக்காய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் சின்ன வெங்காயத்தை நறுக்கி வைக்க வேண்டும். பின் பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்க வேண்டும்.
தேங்காய் துருவலுடன் பூண்டு பல், சீரகம் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். பின் வாணலியில் கத்தரிக்காயை போட்டு மூழ்கும் தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும். பின் வெந்ததும் மஞ்சள் தூள், அரைத்த தேங்காய் விழுது மற்றும் உப்பு போட்டு கிளற வேண்டும். பின் மற்றோரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, பச்சடியில் சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இப்பொது சுவையான கத்தரிக்காய் பச்சடி தயார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)