சுவையான பிச்சு போட்ட கோழிக்கறி வறுவல் செய்வது எப்படி?
Chicken recipe -பிச்சு போட்ட கோழிக்கறி வறுவல் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருள்கள்:
- கோழி தொடை பகுதி =அரைகிலோ
- பட்டை =1
- கிராம்பு =2
- ஏலக்காய் =2
- சோம்பு =அரைஸ்பூன்
- தேங்காய் துருவல் =3 ஸ்பூன்
- மிளகாய் தூள் =1 ஸ்பூன்
- மிளகு தூள் =2 ஸ்பூன்
- சீராக தூள் =1 ஸ்பூன்
- சிக்கன் மசாலா =1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் =அரை ஸ்பூன்
- மல்லி தூள் =2 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது =1 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் =3 ஸ்பூன்
- வெங்காயம் =2
செய்முறை:
முதலில் சிக்கனை குக்கரில் சேர்த்து சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுக்கவும். இப்போது சிக்கனை ஆரவைத்து அதை சிறு சிறு பீசாக பிச்சு போடவும். ஒரு பாத்திரத்தில் சோம்பு, ஏலக்காய், கிராம்பு ,பட்டை, கருவேப்பிலை தேங்காய், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சிக்கன் மசாலா ,சீரகத்தூள், மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
இப்போது மற்றொரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து கிளறவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து ஒரு நிமிடம் கலந்து விடவும் .
பிறகு அதனுடன் நாம் பிச்சு வைத்துள்ள சிக்கனை சேர்த்து கிளறி விடவும் .அதனுடன் சிக்கன் வேக வைத்த தண்ணீர் ஒரு டம்ளர் அளவு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலா சிக்கனில் படும் வரை ஒரு ஐந்து நிமிடம் அந்த தண்ணீர் மற்றும் வரை வேக வைக்கவும்.இப்போது அந்த தண்ணீர் வற்றியதும் சிறிது கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் பிச்சு போட்ட கோழி வருவல் தயார்.