காலையில் இத ட்ரை பண்ணுங்க ! சுவையான ஓட்ஸ் இட்லி செய்வது எப்படி?
சுவையான ஓட்ஸ் இட்லி செய்யும் முறை
பொதுவாக நாம் காலையில் உணவை தேடி உண்பதைவிட கடைகளில் வாங்கி உண்பது தான் அதிகம். இப்படி உண்பதால் நமது பணம் வீணாவதுடன், சிலநேரங்களில் ஆரோக்கியமற்ற உணவுகளையும் வாங்கி உண்கிறோம். இதனை தவிர்த்து நாம் நம் வீடுகளிலேயே உணவுகளை செய்து சாப்பிடுவது நல்லது. தற்போது இந்த பதிவில் ஓட்ஸ் இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- ஓட்ஸ் – 4 கப்
- இட்லி மாவு – 2 கப்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஓட்ஸ் இட்லி செய்வதற்கு, ஓட்ஸை மிக்ஸியில் போட்டு நன்றாக மாவாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஓட்ஸ் மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் இட்லி மாவையும் சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்தை விட கொஞ்சம் நீர்க்க கரைத்துக் கொள்ளவேண்டும். பின் மாவை புளிக்க வைக்காமல், இட்லி தட்டில் மாவை ஊற்றி வேக வைக்கவேண்டும். இப்போது சுவையான ஓட்ஸ் இட்லி தயார்.