சுவையான பருப்பு சாம்பார் செய்வது எப்படி?
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாம்பார் என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான பருப்பு சாம்பார் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- வேக வைத்த துவரம்பருப்பு – இரண்டு கோப்பை
- தக்காளி – 1
- வெங்காயம் – 1
- பச்சை மிளகாய் – ஒன்று
- மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
- கறிவேப்பிலை கொத்தமல்லி – சிறிதளவு
- தாளிக்க எண்ணெய் – சிறிது
- கடுகு – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- பெருங்காயத்தூள் – கொஞ்சம்
செய்முறை
முதலில் வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொண்டு, பருப்புடன் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து கலக்கி வைக்க வேண்டும். பின் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பச்சை மிளகாய் கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும்.
பின் பெருங்காயத்தூள் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின் வேகவைத்து வைத்துள்ள பருப்புடன் சேர்க்க வேண்டும். பருப்பு கலவையை நன்றாக கலந்துவிட வேண்டும். பின் சாம்பாரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.
பின் வேறு பாத்திரத்துக்கு மாற்றி கொத்தமல்லித்தழை தூவி சாதத்துடன் சாப்பிட வேண்டும். இப்போது சுவையான பருப்பு சாம்பார் தயார்.