சுவையான மொச்சை வடை செய்வது எப்படி?
நாம் அதிகமாக நேரங்களில், தேநீருடன் ஏதாவது நொறுக்குத்தீனி உண்பது வழக்கம். தற்போது இந்த பதிவில் சுவையான மொச்சை வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- பெரிய மொச்சை – அரை கப்
- வெங்காயம் -ஒன்று
- வேக வைத்த -உருளைக்கிழங்கு 1
- பச்சை மிளகாய் -2
- மஞ்சள்தூள் -கால் தேக்கரண்டி
- மிளகாய் தூள் -அரை தேக்கரண்டி
- சோம்பு தூள் -கால் தேக்கரண்டி
- சோள மாவு -ஒரு தேக்கரண்டி
- உப்பு -சிட்டிகை
- எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை
முதலில் மொச்சையை பத்து மணி நேரத்திற்கு ஊற வைக்கவேண்டும். ஊறியதும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும். அரைத்த கலவையுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து மசிக்கவேண்டும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்புத் தூள், சோள மாவு மற்றும் உப்பு போட்டு செய்ய வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்த மாவை வடைகளாக தட்டிப் போட்டு பொரித்து எடுக்கவேண்டும். இப்போது சுவையான மொச்சை வடை தயார்.