அட்டகாசமான மீன் புளி வறுவல் செய்வது எப்படி?
மீனை பயன்படுத்தி நாம் விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மீன் என்றாலே விரும்பி சாப்பிடுவது உண்டு. மீனில் நமது உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களும் உள்ளது. இந்த மீனை பயன்படுத்தி நாம் விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- மீன் – கால் கிலோ
- மிளகாய் தூள் – அரை டேபிள் ஸ்பூன்
- மீன் வறுவல் பொடி – 4 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
- புளி – நெல்லிக்காய் அளவு
- உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில், மீன் வறுவல் பொடி, மிளகாய் பொடி இரண்டையும் போட்டு நன்றாக கலந்து வேண்டும். பின் புளியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து புளியை கரைத்து தேவையான அளவு புலி தண்ணீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். பின் மீன் துண்டுகளை போட்டு இரண்டு புறமும் நன்றாக தடவி ஒரு மணி நேரம் ஊற விட வேண்டும்.
பின் தோசை தவாவில் எண்ணெய் விட்டு மீன் துண்டுகளை போட்டு இரண்டு பக்கமும் மெதுவாக திருப்பி போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.