சுவையான மீன் வறுவல் செய்வது எப்படி?
நாம் மீனை வைத்து விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- வஞ்சிரம் மீன் – அரை கிலோ
- பூண்டு பேஸ்ட் – 2 மேசைக்கரண்டி
- மிளகாய் தூள் – ஒரு மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள் – அரை மேசைக்கரண்டி
- மிளகு தூள் – அரை மேசைக்கரண்டி
- சோயா சாஸ் – ஒரு மேசைக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மீன் மற்றும் எண்ணெய் தவிர, மற்ற பொருட்களை ஒன்றாக சேர்த்து நன்கு கலக்க வேண்டும். கலந்து வைத்துள்ள மசாலாவில், மீன் துண்டுகளை பிரட்டி அரை மணி நேரம் பிரிட்ஜில் வைத்து ஊற விட வேண்டும்.
பின் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மசாலாவில் பிரட்டி வாய்த்துள்ள மீன் துண்டுகளை போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்க வேண்டும். இப்பொது சுவையான மீன் வறுவல் தயார்.