அட்டகாசமான சுவையில் முட்டை மசாலா செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம்..!
முட்டையை வைத்து எக் புர்ஜி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்..
சென்னை ;முட்டையை வைத்து எக் புர்ஜி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்..
தேவையான பொருட்கள்;
- எண்ணெய் =5 ஸ்பூன்
- முட்டை =ஆறு
- ஏலக்காய்= மூன்று
- பிரிஞ்சி இலை =ஒன்று
- சீரகம் =ஒரு ஸ்பூன்
- பட்டை= மூன்று
- வெங்காயம்= இரண்டு
- இஞ்சி பூண்டு பேஸ்ட் =1 ஸ்பூன்
- தக்காளி= இரண்டு
- பச்சை மிளகாய்= இரண்டு
- மிளகாய் தூள்= ஒரு ஸ்பூன்
- மல்லித்தூள் =ஒரு ஸ்பூன்
- மஞ்சள் தூள் =அரை ஸ்பூன்
செய்முறை;
முதலில் கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட்டு பொடிமாஸ் பக்குவம் வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதே கடையில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், ஏலக்காய், பிரிஞ்சி இலை ,பட்டை ஆகியவற்றை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
பிறகு இஞ்சி, பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து விட்டு இரண்டு தக்காளிகளை அரைத்து சேர்த்துக் கொள்ளவும் .பிறகு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் ஆகியவற்றை சேர்ந்து கலந்து விட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். கிரேவி பதத்திற்கு வரும்வரை கொதிக்க வைக்கவும். எண்ணெய் பிரிந்து வந்த பிறகு வறுத்து வைத்துள்ள முட்டை மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து இரண்டு நிமிடம் கலந்துவிட்டு இறக்கினால் எக் புர்ஜி தயார்.