சுவையான முருங்கைக்காய் கூட்டு செய்வது எப்படி?
சுவையான முருங்கைக்காய் கூட்டு செய்யும் முறை.
நம்மில் பலரும் முருங்கைக்காயை விதவிதமாக செய்து செய்து சாப்பிடுவதுண்டு. முருங்கைக்காயை உள்ள இரும்புசத்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகவும் முக்கிய பங்கினை வகிக்கிறது. தற்போது இந்த பதிவில் சுவையான முருங்கைக்காய் கூட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- சிறிது நீளமாக வெட்டிய முருங்கைக்காய் – 2 கப்
- கடலைப்பருப்பு – கால் கப்
- பாசிப்பருப்பு – கால் கப்
- தேங்காய் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 2
- காய்ந்த மிளகாய் – 2
- சீரகம் – கால் டீஸ்பூன்
- மாஞ்சால் தூள் – கால் டீஸ்பூன்
தாளிக்க
- எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
- கடுகு – கால் டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் குக்கரில் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் முருங்கைக்காயை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிட வேண்டும்.
பின், தேங்காய் துருவல், பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து, அதனுடன் சேர்க்க வேண்டும். இறுதியாக வெந்த பருப்புகளை சேர்த்து, தாளித்து இறக்க வேண்டும். இப்பொது, சுவையான முருங்கைகாய் கூட்டு தயார்.