சுவையான வெந்தய கீரை சாதம் செய்வது எப்படி?
சுவையான வெந்தய கீரை சாதம் செய்யும் முறை.
நாம் நமது வீடுகளில் பல விதமான சாதங்களை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான சத்தான, வெந்தய கீரை சாதம் செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- கீரை – ஒரு கட்டு
- மிளகாய் வற்றல் – 4
- கடலை பருப்பு – 4 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 3 ஸ்பூன்
- தனியா – 2 ஸ்பூன்
- எண்ணெய் – 5 ஸ்பூன்
- கடுகு – 1 ஸ்பூன்
- தேங்காய் கீற்று – சிறிதளவு
செய்முறை
முதலில் கீரையை சுத்தம் செய்து, கழுவி பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் வெறும் வாணலியில் 2 ஸ்பூன் கடலை பருப்பு, 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, தனியா, மிளகாய் இவற்றை வறுத்து தேங்காயுடன் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி, மீதியுள்ள பருப்புகளை கடுகு வெடித்ததும் போட்டு, மஞ்சள் தூள், சிறிது பெருங்காயத்தூளுடன் போட்டு கீரையை போட்டு வதக்க வேண்டும். வதங்கிய பின்னர், கெட்டியாக புளியை கரைத்து ஊற்றி, கொதிக்க விட வேண்டும். சற்று புளி வாசனை போனதும் தேவையானால் சிறிய கட்டி வெல்லம் சேர்த்து, பிறகு அரைத்து பொடி செய்து பொடியை கொட்டி இறக்க வேண்டும். இப்பொது சுவையான வெந்தய கீரை சாதம் தயார்.