சுவையான வெள்ளரிக்காய் சாம்பார் செய்வது எப்படி?
நம்மில் அனைவருமே சாம்பாரை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான வெள்ளரிக்காய் சாம்பார் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- வெள்ளரிக்காய் – 1
- வெங்காயம் 1
- தக்காளி – 1
- துவரம் பருப்பு – 1 கப்
- கடுகு – தாளிக்க
- சீரகம் – அரை தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
- உப்பு – தேவைக்கேற்ப
- எண்ணெய் – 1 தேக்கரண்டி
- கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெள்ளரிக்காயின் தோல் சீவி, விதைகளை நீக்கி பெரிய பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். மேலும் வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின் துவரம் கொண்டு, விட்டு வேகா வைக்க வேண்டும். பின் கடாயில் எண்ணெய் ஊறி காய்ந்ததும்,கடுகு போட்டு தாளிக்க வேண்டும். கடுகு வெடித்ததும், சீரகம் போடா வேண்டும். அதன் பின் நறுக்கின வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை சேர்த்து வதக்க வேண்டும். சுமார் மூன்று நிமிடம் வதக்கிய பிறகு அதில் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். பின் வகை வைத்து எடுத்துள்ள துவரம் பருப்புடன், சிறிது தண்ணீர் விட்டு சேர்க்க வேண்டும். இதை மேலும் 15 நிமிடம் வேக விட வேண்டும்.
பின்னர் கொத்தமல்லி இலையை தூவி இறக்க வேண்டும். இப்பொது சுவையான வெள்ளரிக்காய் சாம்பார் தயார்.