சுவையான க்ரிஸ்பி தோசை செய்வது எப்படி?
நாம் காலையில் எழுந்தவுடன் காலை உணவாக தோசை, உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான க்ரிஸ்பி தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- பச்சரிசி – 1 கப்
- புழுங்கலரிசி – 1 கப்
- உளுந்து – கால் கப்
- கடலைப்பருப்பு – சிறிதளவு
- வெந்தயம் – 1 மேசைக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, கடலைப்பருப்பு, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக ஒரு பாத்திரத்திலிட்டு குறைந்தது 5 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் கிரைண்டரிதோசைமாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். கடைசியில் தேவையான அளவு உப்பு போட்டு ஒரு நிமிடம் கிரைண்டரை ஓடவிட்டு மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
பின் அடுப்பில் தோசை கல்லை வைத்து, மெல்லியதாக தோசை சுட வேண்டும். இப்பொது சுவையான க்ரிஸ்பி தோசை தயார்.