சுவையான சோள பூரி செய்வது எப்படி?
நாம் தினமும் காலையில், இட்லி, தோசை, பூரி போன்ற உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான சோள பூரி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- மைதா மாவு – ஒரு கப்
- கோதுமை மாவு – ஒரு கப்
- ரவா – அரை கப்
- தயிர் – கால் கப்
- உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் தேவையான அணைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில், கோதுமை மாவு, ரவா, தயிர் மற்றும் உப்பு சேர்த்து, பூரி மாவு பததிற்கு பிசைந்து 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
பின் மாவு நன்கு ஊறியதும், ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து சற்று பெரிதாக தேய்க்க வேண்டும். பிறகு வாணலியில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூரியை போட்டு பொரித்தெடுக்க வேண்டும். இப்பொது சுவையான சோளபூரி தயார்.