சுவையான சில்லி சப்பாத்தி செய்வது எப்படி?

நம்முடைய வீட்டில் உள்ளவர்களுக்கு சப்பாத்தி செய்து கொடுத்ததுண்டு. ஆனால், தற்போது இந்த பதிவில் சுவையான சில்லி சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- சப்பாத்தி -2
- வெங்காயம் -1
- பச்சை மிளகாய் -ஒன்று
- சில்லி சாஸ் -ஒரு டேபிள்ஸ்பூன்
- சோயா சாஸ் -ஒரு டீஸ்பூன்
- தக்காளி சாஸ் -ஒரு டேபிள்ஸ்பூன்
- சிவப்பு புட் கலர் -ஒரு துளி
- கொத்தமல்லி தழை -கால் கட்டு
- உப்பு -தேவைக்கேற்ப
- எண்ணெய் -தேவைக்கற்ப
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சப்பாத்தி சின்ன சின்ன துண்டுகளாக பிய்த்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அதில் உப்பு, சில்லி சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதனுள் ஃபுட் கலர் சேர்த்து தண்ணீர் கலந்து அதையும் சேர்க்க வேண்டும். பிறகு சப்பாத்தி துண்டுகளைப் போட்டு கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவேண்டும். தேவைப்பட்டால் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது சுவையான சில்லி சப்பாத்தி தயார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழிசையின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமித் ஷா.!
April 11, 2025