உடல் சோர்வு நீங்க நண்டு ரசம் செய்வது எப்படி..?
சளி, இருமல், காய்ச்சல் ,உடல் சோர்வு போன்றவற்றை நீக்க நண்டு ரசம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை :சளி, இருமல், காய்ச்சல் ,உடல் சோர்வு போன்றவற்றை நீக்க நண்டு ரசம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்;
- மிளகு= ஒரு ஸ்பூன்
- சீரகம்= ஒரு ஸ்பூன்
- நண்டு =இரண்டு
- வரமிளகாய் =3
- பச்சை மிளகாய் =ஒன்று
- சின்ன வெங்காயம்= ஏழு
- பூண்டு= 6 பள்ளு
- புளி =எலுமிச்சை அளவு
- எண்ணெய் = நான்கு ஸ்பூன்
- கடுகு =அரை ஸ்பூன்
- தக்காளி= இரண்டு
- மஞ்சள் தூள்= 1/2 ஸ்பூன்
செய்முறை;
முதலில் மிளகு ,சீரகம், ஒரு வரமிளகாய் ஆகியவற்றை இடி கல்லில் கொரகொரப்பாக தட்டிக் கொள்ளவும். பிறகு பூண்டு சேர்த்து தட்டிக் கொள்ளவும். இதனை தனியாக எடுத்து வைத்துவிட்டு. அதே கல்லில் சின்ன வெங்காயம், சிறிதளவு கருவேப்பிலை, ஒரு பச்சை மிளகாய் சேர்த்து இடித்துக் கொள்ளவும். புளியை ஊறவைத்து வடித்து அதனுடன் மஞ்சள் தூள் கலந்து கொள்ளவும் .இரண்டு பீஸ் நண்டையும் லேசாக தட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து அதனுடன் தட்டி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். வெங்காயம் வதங்கியவுடன் தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கி பிறகு தட்டி வைத்துள்ள நண்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கிய பிறகு புளி தண்ணீர் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீரும் ஊற்றி இடித்து வைத்துள்ள மிளகு ,சீரகம் மற்றும் உப்பு ,சிறிதளவு கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றை சேர்த்து கலந்து விட்டு நுரை பொங்கி வரும் வரை அடுப்பில் வைத்து இறக்கினால் கமகமவென நண்டு ரசம் ரெடி..