குழந்தைகளுக்குப் பிடித்த சாக்லேட் வீட்டிலேயே செய்வது எப்படி?

Published by
K Palaniammal

Chocolate -வீட்டிலேயே சுலபமான முறையில் சாக்லேட் செய்வது எப்படி என  இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்;

  • சர்க்கரை= ஒரு கப்
  • பால் பவுடர்= ஒரு கப்
  • கொக்கோ பவுடர்= கால் கப்
  • பட்டர்= ஒரு ஸ்பூன்
  • முந்திரி பாதாம்= தேவையான அளவு

செய்முறை;

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து அதில் கால் கப் அளவு தண்ணீரை ஊற்றி மிதமான   தீயில் வைத்துக்கொள்ளவும் .சர்க்கரை நன்கு கரைந்து ஒரு கம்பி பதம் வந்த பிறகு கொக்கோ பவுடரை சலித்து அதில் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் பால் பவுடரையும் சேர்த்து கலந்து விடவும் .இப்போது கட்டிகள் இல்லாமல் கலந்த பிறகு ஒரு ஸ்பூன் பட்டர் மற்றும் நட்ஸ் வகைகளை சிறிதாக நறுக்கி  வறுத்து  அதனுடன் சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும்.

இப்போது இதனை ஒரு நெய் தடவிய பாத்திரத்தில் மாற்றி ஆறவைத்து ஃப்ரீசரில் வைத்து விட வேண்டும் .30 நிமிடம் கழித்து எடுத்தால் கட்டியாக இருக்கும். இப்போது ஒரு கத்தியில் நெய் தடவி உங்களுக்கு பிடித்த வடிவத்தில் நறுக்கி சாப்பிடலாம். தேவைப்படும்போது எடுத்துக்கொண்டு பிறகு இதை பிரிட்ஜில் வைத்துவிட வேண்டும் .மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.இதுபோல் குழந்தைகளுக்கு வீட்டிலேயே சுகாதாரமான  முறையில் செய்து கொடுத்து அசத்துங்கள் .

Recent Posts

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

15 minutes ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

48 minutes ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

1 hour ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

20 hours ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

21 hours ago

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!

மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…

22 hours ago