செட்டிநாடு ஸ்டைல் இறால் கிரேவி அசத்தலான சுவையில் செய்வது எப்படி.?
அசத்தலான சுவையில் இறால் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை :அசத்தலான சுவையில் இறால் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்;
அரைக்க தேவையானவை ;
- தனியா= ஒரு ஸ்பூன்
- ஏலக்காய் =4
- பட்டை= 1
- கிராம்பு =4
- மிளகு= 8
- காய்ந்த மிளகாய்= மூன்று
- சோம்பு= 1/2 ஸ்பூன்
- சீரகம்= ஒரு ஸ்பூன்
- கசகசா ஒரு ஸ்பூன்
தாளிக்க தேவையானவை ;
- இறால் =அரை கிலோ
- எண்ணெய்= ஐந்து ஸ்பூன்
- கடுகு =1 ஸ்பூன்
- மிளகாய்த்தூள்= 3 ஸ்பூன்
- மல்லித்தூள்= ஒரு ஸ்பூன்
- இஞ்சி பூண்டு =பேஸ்ட் ஒரு ஸ்பூன்
- வெங்காயம= இரண்டு
- பச்சைமிளகாய் =இரண்டு
- தக்காளி= இரண்டு
- மஞ்சள் தூள் =ஒரு ஸ்பூன்
- புளி =நெல்லிக்காய் சைஸ்
செய்முறை;
தனியா ,ஏலக்காய், பட்டை ,கிராம்பு ,மிளகு, காய்ந்த மிளகாய், சோம்பு, சீரகம், கசகசா ஆகியவற்றை மணம் வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இப்போது அரை கிலோ இறாலை சுத்தம் செய்து அதில் இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து தனியாக எடுத்து வைத்து விட வேண்டும் .இப்போது ஒரு கடாயில் ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு சேர்த்து தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் ,இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து வதக்கி தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
பிறகு மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் ,தனியாத்தூள் ஒரு ஸ்பூன், அரை ஸ்பூன் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து புளிக்கரைசலையும் ஊற்றி சிறிதளவு தண்ணீரும் ஊற்றி கலந்துவிட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைத்துக் கொள்ளவும் .பிறகு அதில் இறாலை சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைத்து கொத்தமல்லி இலைகளை தூவி இறக்க வேண்டும். இப்போது சுவையான இறால் கிரேவி ரெடி.