வீட்டில் சப்பாத்தி மீந்து போய்விட்டதா? இப்படி அதில் நூடுல்ஸ் செய்து கொடுத்து பாருங்கள்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாக இந்த காலத்தில் இருப்பது நூடுல்ஸ். அதிலும் பெரியவர்களால் சமைக்க நேரம் இல்லாத சமயத்தில் ஈசியாக சமைத்துக் கொடுப்பதற்காக நூடுல்ஸ் செய்து கொடுத்துவிடுவார்கள். அதன் சுவை மிகவும் அருமையாக இருப்பதால் குழந்தைகளும் அதனை மீண்டும் மீண்டும் செய்ய கேட்பார்கள். ஆனால் இதனை அடிக்கடி செய்வதனால் உடலுக்கு பல்வேறு தீமைகள் ஏற்படும். அதனால் மீந்துபோன சப்பாத்தியை வைத்து சுவையான நூடுல்ஸ் செய்வது எப்படி என்று இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்: சப்பாத்தி – ஐந்து, குடைமிளகாய் – 1/2, கேரட் – 1, முட்டை கோஸ் – 1/2 கப், எண்ணெய் – இரண்டு ஸ்பூன், வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – இரண்டு, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன், சோயா சாஸ் – ஒரு ஸ்பூன், தக்காளி சாஸ் – ஒரு ஸ்பூன்.
செய்முறை: முதலில் சப்பாத்தியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும். மேலும், வெங்காயம், பச்சைமிளகாய், குடை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ள வேண்டும். முட்டைகோஸை பொடியாக துருவிக் கொள்ள வேண்டும். அதேபோல் கேரட்டையும் பொடியாக துருவிக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்துக் கொண்டு அதன்மீது ஒரு வாணலியை வைத்து கொள்ள வேண்டும். இதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக சூடானவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாயை அதில் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதனுடன் மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்னர் துருவி வைத்துள்ள முட்டைகோஸ் சேர்க்கவேண்டும். இதனுடன், கேரட்டையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பின்னர் அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். அதன்பிறகு சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து முழுவதுமாக கிளறிவிட வேண்டும். இப்பொழுது நீளமாக நறுக்கி வைத்துள்ள சப்பாத்தியை அதில் சேர்த்து கலந்துவிட வேண்டும். கடைசியாக மிளகு தூள் சேர்த்து கலந்து விட்டு நன்கு அனைத்தும் ஒன்றோடு ஒன்று இருக்குமாறு கலந்த பின்னர் அடுப்பை அணைத்து விடலாம். அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான சுவையான சப்பாத்தி நூடுல்ஸ் ரெடி.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…