தொண்டைக்கு இதமான கற்பூரவல்லி மசாலா டீ செய்வது எப்படி.?
மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமலை விரட்ட கற்பூரவல்லி மசாலா டீ செய்வது எப்படி என பார்க்கலாம்.
சென்னை ;மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமலை விரட்ட கற்பூரவல்லி மசாலா டீ செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்;
- கற்பூரவல்லி இலை =8-10
- மிளகு= 10
- இஞ்சி= இரண்டு துண்டு
- பால் =ஒரு டம்ளர்
- மஞ்சள் தூள்= கால் ஸ்பூன்
- டீ தூள்= இரண்டு ஸ்பூன்
- பனங்கற்கண்டு =தேவையான அளவு.
செய்முறை;
பாலில் 1 ,1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் கற்பூரவல்லி இலைகளை சிறிதாக கிள்ளி சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி ,மிளகு, ஏலக்காய் ஆகியவற்றை தட்டி சேர்த்து காய வைத்துக் கொள்ளவும் .பால் பொங்கி வந்த பிறகு ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்கவும் .பின் அடுப்பை அணைத்த பிறகு பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரை தேவையான அளவு சேர்த்து கலந்து வடிகட்டிக் கொள்ளவும். இப்போது தொண்டைக்கு இதமான கற்பூரவல்லி க்கு தயார்.