பிரட் இருக்கா? சூப்பரா காலை பிரேக் பஸ்ட் இப்படி செஞ்சி பாருங்க..!
வீட்டில் பிரட் இருந்தால் இந்த ரெசிபியை செய்து கொடுத்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்: பிரட் – பத்து துண்டுகள், முட்டை – பத்து, உப்பு – 1/2 ஸ்பூன், சர்க்கரை – ஏழு ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், மிளகுத் தூள் – 1 ஸ்பூன், நெய் – ஐந்து ஸ்பூன்.
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் உப்பு, மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். மசாலாவுடன் நன்கு கலந்த பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு தோசைக்கல்லை வைக்க வேண்டும்.
கல் சூடானதும் அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து பிறகு ஒவ்வொரு துண்டு பிரட்டாக எடுத்து இந்த முட்டை மசாலாவில் நன்றாக கலந்து பின்னர் தோசைக்கல்லில் போட வேண்டும். இருபுறமும் நன்கு சிவந்த பின்னர் எடுக்க வேண்டும். அவ்வளவு தான் பிரட் வைத்து சூப்பரான காலை உணவு ரெடி.