பேக்கரி சுவையில் டீக்கடை பன் ஓவன் இல்லாமல் செய்வது எப்படி.?

பஞ்சு போன்ற சாப்டான டீக்கடை பன்  வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்து குறிப்பில் காணலாம்.

bun (1)

சென்னை :பஞ்சு போன்ற சாப்டான டீக்கடை பன்  வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்து குறிப்பில் காணலாம்.

தேவையான பொருட்கள்;

  • காய்ச்சிய பால் =125 எம் எல்
  • சர்க்கரை= 2 ஸ்பூன்
  • ஈஸ்ட்= ஒரு ஸ்பூன்
  • மைதா =ஒரு கப்
  • நெய் =தேவையான அளவு.

yeast (1)

செய்முறை;

முதலில் பாலை காய்ச்சி மிதமான சூட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் இரண்டு ஸ்பூன் சர்க்கரை ,ஒரு ஸ்பூன் காய்ந்த ஈஸ்ட் சேர்த்து கலந்து பத்து நிமிடம் மூடி வைத்துக் கொள்ளவும். பத்து நிமிடம் கழித்து ஒரு கப் மைதா மாவில் உப்பு ,சிறிதளவு நெய் சேர்த்து கலந்துகொண்டு அதன் மீது ஆற வைத்துள்ள பாலை ஊற்றி பிசைந்து கொள்ளவும் .நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு  பிசைந்து மேலாக எண்ணெய்  தடவி ஒரு மணி நேரம் மூடி வைத்துக் விடவும் ..

milk (3) (1)

பிறகு மீண்டும் ஒரு நிமிடம் மிருதுவாக  பிசைந்து அதை நான்கு பகுதியாக பிரித்து இட்லி தட்டில் ரவுண்ட் ஷேப்பாக வைத்து மூடி வைத்து விடவும். சூடேற்றாமல் அப்படியே பத்து நிமிடம் வைத்து விடவும் .இப்போது ஓவனுக்கு  பதிலாக ஒரு அடி கனமான பாத்திரத்தை சூடேற்றி பிறகு மிதமான சூட்டில் வைத்து இட்லி தட்டை சூடேறிய பாத்திரத்தின் மேல் வைத்து மூடி வைக்கவும். 15 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவைத்து பிறகு அதன் மீது நெய் தடவி எடுத்து விடவும். இப்போது சாப்டான பஞ்சு போன்ற டீக்கடை பன்  தயார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live rain news
TAMIL NEWS LIVE
Vaikom 100 - MK Stalin - Pinarayi Vijayan
poondi dam
rajinikanth - tvk vijay -mk stalin
Vaikom 100 Function
Vaikom 100