வாயில் வைத்த உடனேயே கரையக்கூடிய சுவையான அல்வா எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாகவே இனிப்பு என்றால் மனதும் நிறையும், முகத்திலும் மலர்ச்சி உண்டாகும். அதன் காரணத்தினாலேயே எந்த ஒரு நல்ல காரியம் துவங்கினாலும் வீட்டில் இனிப்பு செய்வது வழக்கமாக இருக்கும். அதேபோல் வீட்டில் ஏதும் நல்ல காரியம் நடந்தாலும், கல்யாணம், காது குத்து என எந்த விஷேசமாக இருந்தாலும் இனிப்பு வைத்து விட்டு தான் அடுத்த பலகாரங்கள் வைப்பார்கள். அதன்படி இனிப்பை எடுத்து சாப்பிட்ட உடனேயே மனதும் மகிழ்ச்சி அடையும். பொதுவாகவே கல்யாண வீடுகளில் வாயில் வைத்தாலே கரையும் அளவிற்கு இருக்க கூடிய இனிப்பான அசோகா அல்வா எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்: பாசிப் பருப்பு – 200 கி, கோதுமை மாவு – 200 கி, நெய் – 100 மில்லி, சர்க்கரை – 400 கி, கேசரி பவுடர் – 1 சிட்டிகை, ஏலக்காய் பொடி – 1/2 ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 15.
செய்முறை: முதலில் அடுப்பை பற்ற வைக்க வேண்டும். அதில் ஒரு வாணலியை வைத்து அதில் தேவையான அளவு பாசிப்பருப்பை சேர்க்க வேண்டும். பாசிப்பருப்பை நன்கு பொன்னிறம் வரும் வரை வறுத்து கொள்ள வேண்டும். வறுத்த பாசிப்பருப்பை வேற கிண்ணத்திற்கு மாற்றி கொள்ள வேண்டும். இதில் 3 அல்லது 4 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். இது அரை மணி நேரம் வரை ஊற வேண்டும். பின்னர் ஊறவைத்த பாசிப்பருப்பை அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும். இது வெந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு வெந்திருக்கும் பருப்பை வேற பாத்திரத்திற்கு மாற்றி அதனை ஆற வைக்க வேண்டும்.
ஆறிய பிறகு இதனை மிக்ஸியில் சேர்த்து நல்ல பேஸ்ட்டாக அரைக்க வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து 4 ஸ்பூன் நெய் சேர்த்து கொள்ளுங்கள். இதில் தேவையான அளவு கோதுமை மாவை சேர்த்து சிவக்க வறுக்க வேண்டும். வறுத்த பின்னர் இதனை வேற தட்டிற்கு மாற்ற வேண்டும். பின்னர் அதே வாணலியில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொள்ள வேண்டும். சர்க்கரை கரைய தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். சர்க்கரை தண்ணீர் கம்பி பதம் வந்தவுடன் நீங்கள் வறுத்து வைத்துள்ள கோதுமை மாவு மற்றும் அரைத்துள்ள பாசிப்பருப்பு இரண்டையும் பாகில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
இதனை அடுப்பில் இடைவிடாது கிளறுவது தான் மிகவும் முக்கியம். அப்போது தான் அசோகா நன்கு மென்மையாக வாயில் வைத்த உடனேயே கரையும் வண்ணம் இருக்கும். அதனால் அடுப்பை மிதமான சூட்டல் வைத்து கிளறுங்கள். பிறகு இதில் ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் இரண்டையும் சேர்த்து கலக்க வேண்டும். மேலும் இதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். கிளறும்போது அல்வா பதம் வந்தவுடன் கடைசியாக முந்திரிப்பருப்பு சேர்த்து இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான வாயில் கரையும் அசோகா அல்வா ரெடி.
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…