அசத்தலான பீர்கங்காய் துவையல் செய்வது எப்படி?
நாம் காய்கறிகளை வைத்து குழம்பு, கூட்டு என விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் பீர்க்கங்காயை வைத்து, பீர்க்கங்காய் துவையல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- பீர்க்கங்காய் – ஒன்று
- வரமிளகாய் – 4
- உளுத்தம் பருப்பு – 50 கிராம்
- பெருங்காயம் – சிறிது
- புளி – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை
முதலில் பீர்க்கங்காயை நரம்பு நீக்கி, சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின் கடாயில் எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயம் மூன்றையும் சிவக்க வறுத்து வைக்க வேண்டும்.
பின் அதே கடாயில் மீதி எண்ணெய் விட்டு நறுக்கிய பீர்க்கங்காயை வதக்க வேண்டும். சிறு தீயில் மூடி வைத்து வாதாக்கி எடுக்க வேண்டும். ஆறியவுடன் உப்பு, புளியுடன் வறுத்த பொருட்களையும் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்க வேண்டும். இப்பொது சுவையான பீர்க்கங்காய் துவையல் தயார்.