அசத்தலான உளுந்துவடை செய்வது எப்படி?
நமது வீடுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, வடை என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில் சிறியவர்கள் உளுந்து வடையை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், அசத்தலான உளுந்து வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
செய்முறை
- உளுத்தம்பருப்பு – 1 கப்
- பச்சை மிளகாய் – 3
- பெருங்காயம் – 1 சிட்டிகை
- உப்பு – தேவையான அளவு
- கறிவேப்பிலை – தேவையான அளவு
- கொத்தமல்லி – தேவையான அளவு
செய்முறை
முதலில் உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் கிரைண்டரில், உளுத்தம் பருப்பு, பச்சைமிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
எல்லாம் நன்றாக அறைந்த பின், கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை சிறு சிறு துண்டாக நறுக்கி போட்டு கலந்து கொள்ள வேண்டும். பின் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், வடையை தட்டி நடுவில் ஓட்டை போட்டு, நன்கு சிவக்க பொரித்து எடுக்க வேண்டும். இப்பொது அசத்தலான உளுந்து வடை தயார்.