அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?
சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை –சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்;
- பாசிப்பயிறு- ஒரு கப்
- வெல்லம்- முக்கால் கப்
- ஏலக்காய் -அரை ஸ்பூன்
- முந்திரி -தேவையான அளவு
- நெய் -தேவையான அளவு
செய்முறை;
முதலில் பாசிப்பயிரை வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும். ஆறிய பிறகு மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும் . ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு தேவையான அளவு முந்திரிப் பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அரைத்து வைத்துள்ள பாசிப்பயிறு மாவையும் சேர்த்து கலந்து விடவும். அதனுடன் அரை ஸ்பூன் ஏலக்காயும் சேர்த்து கலந்துவிட்டு கொள்ளவும்.
இப்போது மற்றொரு பாத்திரத்தில் வெல்லம் பொடித்து சேர்த்து அதனுடன் கால் டம்ளருக்கும் குறைவாக தண்ணீர் ஊற்றி வெல்லம் கரையும் வரை சூடேற்றிக் கொள்ளவும். வெல்லப்பாகு தயாரானவுடன் பாசிப்பயிறு மாவில் சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து கொண்டு பிறகு உருண்டை பிடித்துக் கொள்ளவும். இப்போது ஆரோக்கியம் மிக்க பாசிப்பயிறு லட்டு தயாராகிவிடும் .