லைஃப்ஸ்டைல்

வாயில் வைத்தவுடன் கரைய கூடிய அசத்தலான லட்டு செய்வது எப்படி..?

Published by
லீனா

 நமது வீடுகளில் பண்டிகைகளின் போது பெரும்பாலவர்களின் வீட்டில், பலகாரம் செய்வது வழக்கம். அந்த பலகாரங்களில் நமது வீடுகளில் அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பலகாரம் என்றால் அது லட்டு தான். தற்போது இந்த பதிவில் வாயில் வைத்தவுடன் கரையக்கூடிய சுவையான லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • நெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • சம்பா கோதுமை ரவை –  1 கப்
  • சீனி – 1 கப்
  • ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்
  • உப்பு – சிறிதளவு
  • ஃபுட் கலர் – 1 ஸ்பூன்

செய்முறை 

முதலில் லட்டு செய்ய தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதனுள் சம்பா கோதுமை ரவையை இரண்டையும் நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் மற்றொரு கடாயில் தண்ணீர் மூன்று கப் ஊற்றி அதனுள் வறுத்து வைத்துள்ள சம்பா கோதுமை ரவையை போட்டு நன்கு வேக விட வேண்டும்.  அந்த ரவை நன்கு வெந்து கெட்டியான பதத்திற்கு வரும் வரை கிளறி விட வேண்டும்.

அதன் பின்பு ஒரு கப் சீனி, ஏலக்காய் தூள், சிறிதளவு உப்பு, ஃபுட் கலர் இவற்றை சேர்த்து நன்கு கிளறி கொள்ள வேண்டும். சீனி வேண்டாம் என நினைப்பவர்கள், வெள்ளம், நாட்டு சர்க்கரை போன்றவற்றை சேர்த்து கொள்ளலாம். கிளறிய பின்பு மேலும் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கிளறி இறக்கி வைக்க வேண்டும்.

இந்த கலவை நாம் உருண்டை பிடிப்பதற்கு ஏற்ற வண்ணம் சூடுஆறிய பின்பு நமக்கு தேவையான முந்திரி, பாதாம் அல்லது நமக்கு பிடித்த வேறு பருப்பு வகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.  முந்திரி, பாதாம் போன்றவற்றை கலந்த பின் உருண்டையாக பிடித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது சுவையான லட்டு தயார்.

லட்டு என்றாலே நமது வீடுகளில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். நாம் கடைகளில் பணம் கொடுத்து வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டிலேயே இவ்வாறு எளிய முறையில் செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

Published by
லீனா

Recent Posts

பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…

3 hours ago

RR vs LSG: மார்க்ராம் – படோனி அதிரடி அரைசதம்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு..!

ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…

5 hours ago

போதைப் பொருள் வழக்கு: மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜாமீனில் விடுவிப்பு.!

கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…

5 hours ago

“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…

6 hours ago

மிரட்டல் நாயகன் பட்லர் தொட்டதெல்லாம் தூள்.., டெல்லியை வீழ்த்தி குஜராத் மாஸ் வெற்றி.!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…

6 hours ago

ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…

7 hours ago