அசத்தலான இந்தோரி செவ் பராத்தா செய்வது எப்படி..?
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பராத்தா என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. பராத்தாவை பொறுத்தவரையில், அதில் பலவகையான பராத்தா உள்ளது. அந்த வகையில் தற்போது இந்த பதிவில், இந்தோரி செவ் பராத்தா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- 1 கப் அட்டா
- 1-2 தேக்கரண்டி எண்ணெய்
- உப்பு (தேவைக்கேற்ப)
- ¼ கப் செவ்/பூஜியா
- 1/2 வெங்காயம், நறுக்கியது
- 1 பச்சை மிளகாய், நறுக்கியது
- 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
- 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
- 1/2 தேக்கரண்டி ஜீரா தூள்
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை
- எண்ணெய் (தேவைக்கேற்ப)
செய்முறை
முதலில் இந்தோரி செவ் பராத்தா செய்ய தேவையான பொருட்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். ஆட்டாவை எண்ணெயுடன் கலந்து, சிறிது, சிறிதாக எண்ணெய் ஊற்றி, மாவு மென்மையான பதத்திற்கு வரும்வரை நன்கு பிசைய வேண்டும். ஒரு பாத்திரத்தில் வெங்காயம், பச்சை மிளகாய், கரம் மசாலா, சிவப்பு மிளகாய் தூள், உப்பு, ஜீரா தூள் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்க வேண்டும்.
பின் மாவை சம பாகங்களாகப் பிரித்து, தயாரிக்கப்பட்ட கலவையை மையத்தில் வைத்து, அனைத்து விளிம்புகளையும் நன்றாக மூட வேண்டும். பின் மாவை சமமாக உருட்டவும். பின் ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி, அதன் மேல் சிறிது எண்ணெய் தடவி பராத்தாவை இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேகவைக்க வேண்டும். இப்போது சுவையான இந்தோரி செவ் பராத்தா தயாராக உள்ளது.