அசத்தலான சுவையில் காளான் சுக்கா செய்வது எப்படி?
Mushroom recipe – காளானை வைத்து காளான் சுக்கா செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள் :
- காளான்= 200 கிராம்
- எண்ணெய் =ஆறு ஸ்பூன்
- சோம்பு =1 ஸ்பூன்
- பெரிய வெங்காயம்= இரண்டு
- தக்காளி= ஒன்று
- பூண்டு =6 பள்ளு
- பச்சை மிளகாய் =3
- மஞ்சள் தூள்= அரை ஸ்பூன்
- மட்டன் மசாலா =ஒரு ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், கருவேப்பிலை, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் .பிறகு அதிலே பச்சை மிளகாய், தக்காளியும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும் நன்கு வதங்கியதும் மட்டன் மசாலா மற்றும் மஞ்சள் துளை சேர்த்து கலந்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் .பிறகு அதை ஆற வைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது அதே பாத்திரத்தில் மீண்டும் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சோம்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் காளானை சேர்த்து சிறிதளவு உப்பும் சேர்த்து எண்ணையிலேயே வேக வைத்துக் கொள்ளவும்.
முக்கால் பதம் வெந்த பிறகு அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் தண்ணீர் சிறிதளவு சேர்த்து கலந்து அந்த தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி விடவும். இப்போது எண்ணெய் பிரிந்த பிறகு அதில் மல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான காளான் சுக்கா ரெடி.