அசத்தலான ஆலு சமோசா செய்வது எப்படி..?

Samosa

நம்மில் அனைவருமே மாலை நேரத்தில், தேநீருடன் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிடுவது வழக்கம். இதற்காக நாம் தினமும் செலவு செய்து கடைகளில் விற்கக்கூடிய பலகாரங்களை வாங்கி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், ஈவினிங் ஸ்நாக்சிற்கு வீட்டிலேயே ஆலு சமோசா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

நாம் வீட்டிலேயே ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கும் போது, அது சுத்தமான முறையில் செய்யப்படுவதோடு, நமக்கு தேவையான அளவு திருப்தியாக செய்து சாப்பிடலாம். தற்போது இந்த பதிவில் ஆலு சமோசா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • மைதா – 200 கிராம்
  • உப்பு – தேவையான அளவு
  • டால்டா – சிறிதளவு
  • உருளைக்கிழங்கு – அரை கிலோ
  • வெங்காயம் – கால் கிலோ
  • பச்சை மிளகாய் – 2
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் மைதா எடுத்து,அதனுடன் உப்பு, டால்டா ஆகிவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ரொட்டி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

அட… இந்த சின்ன காயில் இவ்வளவு நன்மைகளா..? கட்டாயம் சாப்பிடுங்க..!

அதன் பின்பு ஒரு குக்கரில் உருளைக்கிழங்கை போட்டு வேக வைத்து எடுத்து அதனை தோல் உரித்து நன்கு மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதனுள் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய்ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.

அதன் பின்பு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை அதனுள் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும்.

பின்பு செய்து வைத்துள்ள மாவு கலவையை தட்டையாக தட்டி சுருள் வடிவில் செய்து அதனுள் உருளைக்கிழங்கு கூட்டை வைத்து மூடி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாற வேண்டும். இதனை தக்காளி சாஸ் உடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இப்படி செய்து கொடுத்தல் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்