கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தர்பூசணி மில்க் ஷேக் செய்வது எப்படி ?

milk shake

Watermelon milk shake-  தர்பூசணி மில்க் ஷேக் செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம்.

நீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி நம் உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை தீர்த்து வறட்சி ஆகாமல் பார்த்து கொள்ளும் .மேலும் அடிக்கடி தாகம் ஏற்படாமல் பார்த்து கொள்ளும் .

தேவையான பொருட்கள்;

  • தர்பூசணி =அரை பழம்
  • பால் =அரை லிட்டர்
  • சர்க்கரை =தேவைக்கேற்ப
  • பாதாம் பிசின் =2 ஸ்பூன்
  • சப்ஜா விதை =1 ஸ்பூன்

watermelon 2

செய்முறை;

முதலில்  அரை தர்பூசணி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

milk and watermelon

பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த தர்பூசணி ஜூஸை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அதனுடன் அரை லிட்டர் காய்ச்சி ஆற வைத்த பால் ரெண்டு ஸ்பூன் பாதாம் பிசின் ஒரு ஸ்பூன் சப்ஜா விதைகள் சேர்த்து நன்கு கலக்கவும்.

sabja seeds

பின்பு அதனை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து குடித்தால் குளு குளுவென வெயிலுக்கு இதமான தர்பூசணி மில்க் ஷேக் தயார்.
இது போன்ற ஜூஸ்களை வீட்டிலேயே தயார் செய்து குடித்தால் சுகாதாரமாக இருக்கும் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்