காரசாரமான அட்டகாசமான மிளகு குழம்பு செய்வது எப்படி…? வாங்க பார்க்கலாம்..
நாம் நமது வீடுகளில் தினமும் வகைவகையான குழம்புகள் செய்வது உண்டு. தற்போது இந்த பதிவில் அட்டகாசமான மிளகு குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய் – தேவையான அளவு
- தனியா – 2 டேபிள் ஸ்பூன்
- கடலை பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
- அரிசி – ஒரு டேபிள் ஸ்பூன்
- மிளகு – 3 டேபிள் ஸ்பூன்
- பூண்டு – தேவையான அளவு
- கருவேப்பிலை தேவையான அளவு
- சின்ன வெங்காயம் – 25
- காய்ந்த மிளகாய் – 5
- புலி – எலுமிச்சை பழம் அளவு
- உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
- கடுகு – ஒரு டேபிள் ஸ்பூன்
- வெந்தயம் – ஒரு டேபிள் ஸ்பூன்
- பெருங்காயத்தூள் – அரை டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
மசாலா செய்யும் முறை :
கடாய் நன்றாக சூடானதும் அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 2 டேபிள் ஸ்பூன் தனியா, ஒரு டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி, 3 டேபிள் ஸ்பூன் மிளகு போட வேண்டும். முதலில் இவை எல்லாவற்றையும் சேர்த்து முதலில் வறுத்துக் கொள்ள வேண்டும். 2-3 நிமிடத்திற்கு பின் 2 பல் பூண்டு, 2 கொத்து கருவேப்பிலை சேர்த்து கிளற வேண்டும். பின் 5 காய்ந்த மிளகாய் சேர்த்து குறைந்த தீயில்வறுத்து, அதனை ஆற வைத்து, பின் மிக்சியில் பவுடர் போல அரைத்து கொள்ள வேண்டும், பின் சற்று தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும். இப்பொது பேஸ்ட் போன்ற கலவை கிடைக்கும்.
செய்முறை
ஒரு எலுமிச்சை பழம் அளவு புளியை ஒரு பவுலில் ஊற வைத்து, பின் அதனை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அகலமான காடாயில் 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு , அரை டேபிள் ஸ்பூன் வெந்தயம், ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம், கால் டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள் போட வேண்டும்.
பின் ஒரு கப் சின்ன வெங்காயம் சேர்க்க வேண்டும். கால் கப் பூண்டு, கொஞ்சமா கருவேப்பிலை சேர்த்து அங்கு வதக்க வேண்டும். 3 நிமிடத்திற்கு பின், கரைத்து வைத்துள்ள புலி தண்ணீரை ஊற்ற வேண்டும். அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் கல் உப்பு, சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். ஒரு நிமிடத்திற்கு பின் அரைத்த மசாலாவை சேர்த்து கொதிக்க விட்டு, 2 டேபிள் ஸ்பூன் வெல்லம் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு, எண்ணெய் பிரிந்து வரும் வரை வைத்திருந்து இறக்க வேண்டும். இப்பொது சுவையான மிளகு குழம்பு தாயார்.