சுவையான வாழைத்தண்டு கூட்டு செய்வது எப்படி?

நாம் வாழைத்தண்டை வைத்து பல வகையான உணவுகளை செய்து சாப்பிடுவது மட்டுமல்லாமல், நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. தற்போது இந்த பதிவில் சுவையான வாழைத்தண்டு கூட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- வாழைத்தண்டு – 3 கப்
- வெங்காயம் – ஒன்று
- கடலைப்பருப்பு – ஒரு கப்
- மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
தாளிக்க
- கடுகு – அரை தேக்கரண்டி
- சீரகம் -அரை தேக்கரண்டி
- உளுந்து – அரை தேக்கரண்டி
- கடலை பருப்பு – அரை தேக்கரண்டி
- மிளகாய் வற்றல் – 4
- கறிவேப்பிலை – கொஞ்சம்
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை
முதலில் வாழைத்தண்டு, நறுக்கிய வெங்காயம், கடலை பருப்பு மூன்றையும் சிறிது தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைத்து எடுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுந்து, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் தாளித்தவற்றை கூட்டில் சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். பின் இந்த வாழைத்தண்டு கலவையை நன்றாக கொதிக்கவிட்டு இறக்க வேண்டும். இப்பொது சுவையான வாழைத்தண்டு கூட்டு தயார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025