அசத்தலான ஆந்திரா சாம்பார் செய்வதுஎப்படி ?
நமது வீடுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாம்பார் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில் தற்போது இந்த பதிவில் அசத்தலான ஆந்திரா சாம்பார் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- துவரம் பருப்பு – 1 கப்
- தக்காளி – 3
- சின்ன வெங்காயம் – 8
- பச்சை மிளகாய் – 8
- வர மிளகாய் – 4
- கடுகு,சீரகம்,உளுந்து, கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி
- பூண்டு – 1
- சாம்பார் பொடி – 3 தேக்கரண்டி
- உப்பு – தேவைக்கு
- மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
- சீரகத்தூள் – அரை தேக்கரண்டி
- மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
- புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
- கேரட் -2
- கத்தரிக்காய் – 4
- உருளை – ஒன்று
- கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
முதலில் மேற்குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் பருப்பில் தக்காளி, பச்சை மிளகாய், பாதி வெள்ளை பூண்டு, மஞ்சள்தூள், சீரகத்தூள், சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
பின்னர் காய்கறிகள், சாம்பார் பொடி, புளிக்கரைசல் சேர்த்து ஒரு விசில் விட்டு வைக்க வேண்டும். பின் தனியாக வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் உளுந்து கடலைப்பருப்பு பூண்டு பச்சை மிளகாய் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி பொன்னிறமானதும் மிளகாய் தூளும் சேர்த்து கிளறவேண்டும். அதை சாம்பாரில் கொட்டி 5 நிமிடம் கொதிக்க வைக்கவேண்டும். இப்போது சுவையான ஆந்திரா சாம்பார் ரெடி.