சிக்கன் பிடிக்குமா? அருமையான சிக்கன் பிரட்டல் இப்படி செஞ்சு பாருங்க..!

Published by
Sharmi

சிக்கன் பிடித்தவர்கள் நிச்சயமாக இதுபோன்று சிக்கன் பிரட்டல் ஒருமுறை செய்து பாருங்கள்.

இந்த காலங்களில் பலரும் அதிகமாக விரும்பி சாப்பிடுவது அசைவ உணவுகளை தான். அதிலும் குறிப்பாக சிக்கன் வறுவல் என்றாலே குழந்தைகள், பெரியவர், வேலை பார்ப்பவர்கள் என அனைவருக்குமே பிடித்த ஒரு உணவாக சிக்கன் இருந்து வருகிறது. உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கினால் இதுபோன்ற ஒரு சிக்கன் பிரட்டலை மறக்காமல் செய்து பாருங்கள். ஒரு முறை செய்தாலே இந்த சுவை உங்கள் நாவை விட்டு நீங்காது. இதனை சாதத்திற்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம் அல்லது ரசம், தயிர் என சிம்பிளாக செய்யும் சாப்பாட்டிற்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இந்த சுவைக்கு நிச்சயமாக ஈடுஇணையே இருக்காது. அப்படிப்பட்ட சுவையான சிக்கன் பிரட்டல் செய்வதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய் – கால் கப், சின்ன வெங்காயம் – 10 முதல் 15, துருவிய தேங்காய் – கால் கப், கரம் மசாலா – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – தேவையான அளவு, எலுமிச்சையை சாறு – தேவைக்கேற்ப.

ஊறவைக்க தேவையான பொருட்கள்: சிக்கல் – 500 கிராம், இஞ்சி – ஒரு டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கியது, பூண்டு – 2 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கியது, வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது, கறிவேப்பிலை – தேவையான அளவு, தயிர் – கால் கப், உப்பு – சுவைக்கேற்ப.

மசாலா பொருட்கள்: காஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், மல்லித்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை: முதலில் ஒரு கடாயில் அடுப்பில் வைக்க வேண்டும். அதில் காஷ்மீரி மிளகாய்த்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் இவற்றை சேர்த்து 2 நிமிடம் வரை நன்கு வறுத்து ஒரு பாத்திரத்தில் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் வெங்காயம், வறுத்து வைத்துள்ள மசாலா பொடி சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து கிளறி தேவையான அளவு கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு மற்றும் சிக்கன் சேர்த்து நன்கு கிளறுங்கள். இந்த பாத்திரத்தில் தயிரையும் சேர்த்து சிக்கனுடன் அனைத்தும் ஒன்றாக சேருமாறு கிளறிவிட வேண்டும். இதனை 30 நிமிடம் வரை ஊற வைக்கவேண்டும்.

இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஊறவைத்துள்ள சிக்கன்களை சேர்க்க வேண்டும். இதனை வேறு மூடி போட்டு நன்கு வேக வைக்க வேண்டும். அப்பொழுது சிக்கனில் இருந்து நீர் வெளிவரத் தொடங்கும். அதுபோன்ற சமயத்தில் எண்ணெயை ஊற்றிக் கிளறி, சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு கிளறவும். கடைசியாக சிக்கன் சிவந்து வந்த பிறகு அதில் தேங்காய், கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இறுதியாக எலுமிச்சை சாறு தேவையான அளவு சேர்த்து வைத்து இறக்கி விடலாம். பிறகு அதன் மேல் கொத்தமல்லியை தூவி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான சூப்பரான சிக்கன் பிரட்டல் ரெடி.

Recent Posts

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

21 mins ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

48 mins ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

1 hour ago

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலர்ட்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…

1 hour ago

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

2 hours ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

2 hours ago