prawn thokku (1)
Chennai -கடல் உணவுகளில் ஒன்றானது தான் இறால். இதை எப்படி செய்து கொடுத்தாலும் விரும்பி சாப்பிடும் இறால் பிரியர்கள் ஏராளம் .இறாலில் அதிக அளவு வைட்டமின் டி சத்தும், புரதச்சத்தும் நிறைந்துள்ளது. இதில் கார்போஹைட்ரேட் இல்லை என்பதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இந்த அசைவ உணவை தேர்வு செய்யலாம்.
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்;
தாளிக்க தேவையானவை ;
மசாலா பொடிகள் ;
முதலில் இறாலை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் ,மிளகு, சீரகம் மற்றும் அரை ஸ்பூன் சோம்பை சிறிதளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து பொரிந்ததும் பெரிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இப்பொழுது அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதன் பச்சை வாசனை போன பிறகு தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கி விடவும். தக்காளி வதங்கியதும் மசாலா பொடிகளை சேர்த்து கிளறிவிட்டு அதிலே இறாலையும் சேர்த்து கலந்து விடவும். இறால் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி உப்பும் சேர்த்து இறாலை வேக வைக்கவும். இறால் வெந்த பிறகு கலந்துவிட்டு தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் நாவூரும் சுவையில் இறால் தொக்கு ரெடி..
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…