தேவையான பொருட்கள்: சாதம் – 1 கப், முட்டை – இரண்டு, எண்ணெய் – மூன்று ஸ்பூன், வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்று, மிளகு தூள் – 1/2 ஸ்பூன், பூண்டு – 3 பல், இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, கொத்தமல்லித்தழை – 1 கைப்பிடி, புதினா தழை – 1 கைப்பிடி, சீரகம்- 1/4 ஸ்பூன், உப்பு – 1/2 ஸ்பூன்.
செய்முறை: முதலில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை நன்கு நறுக்கி கொள்ளுங்கள். அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். இதில் இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து வதக்குங்கள். வதங்கிய பிறகு இதில் வெங்காயம், சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்க வேண்டும். பிறகு புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்க வேண்டும். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.
பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பின்னர் இதில் 2 முட்டையை உடைத்து ஊற்றுங்கள். இதனை நன்கு கிளறுங்கள். முட்டை நன்கு வெந்து வதங்கி சுருங்கிய பிறகு மிளகு தூள் சேர்க்க வேண்டும். கடைசியாக வடித்து வைத்துள்ள 1 கப் சாதத்தை இதனுடன் சேர்த்து கிளறினால் போதும் சுவையான முட்டை ஃப்ரைட் ரைஸ் ரெடி. வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக இந்த ஃப்ரைட் ரைஸ் சாதத்தை சாப்பிடுவார்கள். செய்து பார்த்து மகிழுங்கள்.
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…