உங்க வீட்டில் கறுத்துப்போன கல்பதித்த கவரிங் நகைகள் இருக்கா? இதை ஐந்து நிமிடத்தில் தங்கம் போல ஜொலிக்க வைக்கலாம்..!

Published by
Sharmi

வீட்டில் வைத்திருக்கும் கல் பதித்த கவரிங் நகைகளில் உள்ள அழுக்குகளை இந்த முறைப்படி எளிமையாக நீக்கிவிடலாம்.

பொதுவாகவே வீட்டில் கல் பதித்த மோதிரங்கள், நெக்லஸ், வளையல், கம்மல் என நகைகள் இருக்கும். இந்த நகைகள் தங்கம் மற்றும் கவரிங் என வைத்திருப்பார்கள். இப்பொழுது தங்கம் மற்றும் கவரிங் நகைகளில் கல் பதித்து வைத்திருக்கக்கூடிய நகைகளை எப்படி பளிச்சென புத்தம்புதிதாக மாற்றுவது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். இந்தப் பதிவு வெள்ளைக்கல் பதித்து இருக்கக்கூடிய நகைகளுக்கு பொருந்தாது. அதனால் வேறு நிறக்கல்  வைத்திருக்கக்கூடிய நகைகள் இருந்தால் இந்த முறையினை கொண்டு பளிச்சென தங்கம் போல மின்ன வைக்கமுடியும்.

முதலில் இதற்கு அவசியமான ஒரு பொருள் பூந்திக்கொட்டை. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய பொருளான பூந்திக்கொட்டைகளை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் இரண்டை எடுத்துக் கொண்டு உடைத்து அதில் இருக்கும் கொட்டைகளை நீக்கி விட்டு மேல் உள்ள தோலை மட்டும் நல்ல தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். இது ஊறிய பிறகு அந்தத் தண்ணீரை அடுப்பில் வைத்து சூடு செய்யவும். நன்றாக நுரை பொங்க ஆரம்பிக்கும். பின்னர் இதனை அடுப்பை அணைத்து விட்டு கீழே இறக்கி விடலாம். இது ஆறிய பிறகு உள்ளே இருக்கும் பூந்திக்கொட்டகளையும் நன்கு நசுக்கி விட்டு நுரைகளை அதிகப்படுத்திய பிறகு இந்த விழுதை வெளியேற்றிவிடலாம்.

பிறகு இதனுடன் உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய எந்த பல் துலக்கும் பேஸ்ட் ஆக இருந்தாலும் சரி அதில் இருந்து அரை ஸ்பூன் எடுத்து அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை நன்றாக கலக்கி விடவும். இதில் நீங்கள் வைத்திருக்கும் கல் பதித்த நகைகளை சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் வெளியே எடுத்து மென்மையான பிரஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அழுத்தமாக சுத்தம் செய்யக்கூடாது. கல் பதித்த நகைகள் என்பதால் அழுத்தம் கொடுத்தால் கல் கொட்டி விடும் அபாயம் உண்டு. அதனால் மெதுவாக துடைக்க வேண்டும், பின்னர் ஒரு காட்டன் துணியை கொண்டு நன்கு துடைத்து விடவும். அவ்வளவுதான் உங்களது நகை பொலிவோடு தங்கம் போல பளபளவென மின்ன தொடங்கும்.

Recent Posts

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்! 

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…

2 hours ago

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

4 hours ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

5 hours ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

5 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

6 hours ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

6 hours ago